சனி, 28 ஜூலை, 2018

புதுக்கோட்டை கலை நயம்

     குன்றாண்டார் கோயில் தேர் வடிவம்
                            அரிகண்டம்

                        பாறை ஓவியம்
                   சமணப் படுக்கைகள்
             சமணப் படுக்கையின் மேல்                                வரையப்பட்ட ஓவியம்
            விஜயாலய சோழிச்சுவரம்
     திருமயம் குடைவரைக் கோயில்
       அங்குள்ள நாயக்கர் கால சிற்பம்
            குரங்குகள் நடனமாடும் காட்சி
              யானை கவரி வீசும் காட்சி
   குடுமியான் மலை இசைக் கல்வெட்டு
                      ஈருடல் ஒரு தலை
           புதுக்கோட்டை மன்னர் பதவி                                       ஏற்கும் இடம்
      அதன் மேல் உள்ள அறுங்கோண                                 வடிவ விதானம்
             
     ஆளுருட்டி மலை சமண சிற்பம்
         
                கொடும்பாளூர் கோயில்

புதன், 28 மார்ச், 2018

தாய் தெய்வ வழிபாடு

தாய்த்தொய்வ வழிபாடு

இனக்குழு சமுதாயத்தில் அவர்களின் உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளின் அடிப்படையில் தெய்வ நம்பிக்கைகள் உருவானது. தொல்பழங்காலத்தில் இயற்கையின் சீற்றத்தினைக் கண்டு அஞ்சி வழிபட்டனர். இனக்குழு அமைப்பாக மாறிய போது வளமை, இனவிருத்தி போன்றன பெருகியதால் சடங்குகள் உருவாக்கப்பட்டன. சமுதாயத்தின் அமைப்புமுறை, கால்நடை வளர்ப்பு போன்றன வளர்ந்ததால் தெய்வ வழிபாட்டில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய மாற்றங்களால் பெருங்கற்காலத்தில் (இரும்புக் காலம்) ஆவி வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, குலக்குறிவழிபாடு போன்றனவும் இவற்றிற்கான சடங்குகளும் உருவாக்கப்பட்டன. இவற்றில் தாய்த்தெயவ வழிபாடு குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியத்தில் தாய்த்தெயவ வழிபாடு பரவலாகப் பேசப்படுகின்றது. ஆண் தெய்வங்களைக் காட்டிலும் பெண் தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பெண்தெய்வங்கள் அரமகளீர், தேவப் பெண்கள், பாவை, கொல்லிப் பாவை, அணங்கு, கொற்றவை, பழையோள் போன்று பல பெயர்களில் பேசப்படுகின்றன. ஆற்றல் வாய்ந்த செயல்கள் அனைத்தும் பெண் தெய்வமான அணங்குடன் இணைத்தனர். முருகனை 'அணங்குடை முருகன் கோட்டம்', என்றும் மழையை 'மழை யணங்கு' என்றும் இலக்கைத் தாக்கும் அம்பை 'அணங்குடை பகழி' என்றும் அரச கட்டிலை 'அணங்குடை கட்டில்’ என்றும் போர்முரசை ‘அணங்குடை முரசு ' என்றும் போர்க்களத்தை 'அணங்கரும் பறந்தலை' என்றும் வீட்டு நிலையை 'அணங்குடை நெடுநிலை' என்றும் எல்லாவற்றையும் பெண் தெய்வத்தின் வடிவத்தில் பார்த்தனர்.

மனத இனவிருத்தியின் இரகசியம் தெரியாத காலத்தில் பெண் இனவிருத்தியின் தெய்வம் என்று முதன்மைபடுத்தப்பட்டாள். பூமியில் உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய இரண்டிற்கும் தாய் "ஜகன்மாதா" அல்லது ஒரே தாய் என்ற நம்பிக்கை இதை இடிப்படையாக்க் கொண்டு உருவானது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகிலுள்ள பல நாடுகளிலும் இத்தகைய நிலையே இருந்தது.  பயிர்த் தொழில் வளர்ச்சியடைந்த காலத்தில் சமுதாயத்தின் வளமைக்கு பூமியே கருபொருளாகக் கருதப்பட்டது. இதனால் பெண்ணையும் மண்ணையும் ஒன்றாகக் கருதினர்.

பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டிலும் பெண் முக்கியமான பங்கு வகிக்கின்றாள். அதனால் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் முதன்முதலில் பெண் தெயவச் சிற்பங்கள் நடப்பட்டன. வடஆர்க்காடு மாவட்டத்தில் மோட்டூர் மற்றும் உடையா நத்தம் ஆகிய இடங்களில் மனித சாயல் கொண்ட கற்சிற்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை ஸ்ரீவத்சத்தைப் போன்ற அமைப்புடையனவாக உள்ளன. இதை ஆதித் தாய்த் தெய்வம் என்று கருதுகின்றனர்.

தாழி வகையைச் சார்ந்த ஈமச்சின்னங்கள் பெண் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை, கோவை, கரூர், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டெக்கப்பட்ட தாழிகளில் பெண்ணின் உருவம் உருவகப் படுத்தப்பட்டுள்ளன.  பெண்ணை தாழியாகப் பாவித்து இவை உருவாக்கப்பட்டுள்ளன.  ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு தாழிகள் ஒன்றில் தாழியின் மேல்பகுதியில் பெண்ணின் மார்பகங்கள் இரண்டு காட்டப்பட்டுள்ளன. இதன் கீழ்ப்பகுதியில் மூன்று கோடுகள் தாழியின் கீழ்ப் பகுதி வரை  செல்கின்றன. இது தாழியை பெண்ணின் உருவமாகக் காட்ட முற்பட்டச் செயலின் வெளிபாடாகும்.

மற்றொரு தாழியின் மேல் பகுதியில் நின்ற நிலையில் ஒரு தாய்த் தெய்வமும் அதன் அருகில் கம்பு அல்லது கரும்பு போன்ற செடி ஒன்றும், அதன் மேல் கொக்கு ஒன்று அமர்ந்த நிலையிலும், இவற்றின் இடது பக்கத்தில் மான் ஒன்றும், அதன் கீழ்ப் பகுதயில் உடும்பு ஒன்றும் புடைப்பு உருவங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இவை இனவிருத்தியின் எச்சம் என்பது தெளிவு.

தற்போது ஆந்திர மாநிலத்தில் கோதாவரிக்கு அருகிலும், கம்மம் மாவட்டத்திற்கு அருகிலும் மூன்று தாய்த்தெய்வ உருவங்கள் பெருங்கற்காலச் சின்னங்களில் கண்டெக்கப்பட்டுள்ளன. குத்துக்கல் வடிவத்திலுள்ள அக் கல்லில் பெண்ணின் மார்பகங்கள் இரண்டு புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. மற்ற இரண்டு குத்துக்கற்களின் மேல் பகுதியில் இரண்டு பள்ளங்களும், கீழ்ப்பகுதியில் ஒரு பள்ளமும் காணப்படுகின்றன. இவை பெண்ணின் உருவங்கள் என்று தொல்லியல் ஆய்வாளர் கே.பி. ராவ் அவர்கள் கூறுகிறார்.

மேற்கோள் நூல் கள்
தமிழர் பெருங்கற்கால பண்பாடு
தினமணி தொல்லியல் மனி செல்வராஜ்  தாய் தெய்வம்

வியாழன், 22 பிப்ரவரி, 2018

கொடுமனத்தால் கண்டு கொள்ளாத கொடுமனத் தொன்மை

   


 கருவி செய்யப்பயன்படுத்திய இடம்
                     சங்கு விற்கும் இடம்


                         நாணயங்கள்
                         ஆபரணங்கள்

             பானையோடுகள் எழுத்துகள்


                               மணிகள்

திங்கள், 22 ஜனவரி, 2018

கொங்கு நாட்டு கும்மி பாடல்

கொங்கு நாட்டு பகுதியில் நாங்கள் சிறுவர்களாய் இருந்தநாட்டுபபோது தை   3 ஆம் நாள் அன்று பூப்பறிக்க செல்லுதல் என்ற ஒரு நிகழ்வு இருந்தது. அந்நிகழ்வில் ஊரின் அனைத்து குடும்பங்களும் தின்பண்டங்களை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு , ஊரில் உள்ள ஆற்றங்கரை , அல்லது, பசுமையான இடங்களுக்கு சென்று பங்கி உண்பர். அப்படி செல்லும் வழிநெடுக பெண்கள் கும்மி அடித்து பாடிக்கொண்டே செல்வர்.. 
அதை அனுபவித்த கடைசி தலைமுறையும் நாம் தான்..

அப்பாடல்...
*********
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு...

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை
ஓலே.. ஓலே...

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா..

சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்...

சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா..

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு..
ஓலே..ஓலே ....

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை...

கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா...

கையிருப்போ காப்பணந்தேன்..
கடைச்செலவோ வெகுகனந்தேன்...

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா...

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு...
ஓலே... ஓலே..
ஓலே...ஓலே....

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

அனைவருக்கும் பூப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

திங்கள், 8 ஜனவரி, 2018

கோவையின் ஆறாத வடு

இவர்கள் தான் தோழர்கள் .
இவர்கள் தான் தோழர்கள் .

ஜனவரி 8.
கோவை வரலாற்றில்
முக்கியமான நாள்.
இந்த நகரம் அதிர்ந்த,
இந்த நகரம் கண்ணீரில்
நனைந்த நாள்.

அது. பஞ்சாலைகள் கொடி கட்டிப் பறந்த காலம். புகழ் பெற்ற பஞ்சாலைகளில்  ரங்கவிலாஸ் மில்லும் ஒன்று.

1911ல் ஜின்னிங் ஃபேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் ,1922ல் பெரும் நூற்பாலையாக வளர்சியடைந்தது.

ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும் இந்த மில்லின் துடிப்பும் துணிவும்மிக்க  இளம் தொழிலாளிகள் . சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர்கள் .

15 மணி நேரம் உழைப்புக்கு மாதச் சம்பளம் 15 ரூபாய்தான் . ஏனென்று கேட்டால்
பஞ்சாலைப் பாதுகாவலர்கள் சங்கம் என்ற பெயரில்ஆலை முதலாளிகள்  வைத்திருந்த  ரவுடிகளின் தாக்குதல் அட்டகாசங்கள் . பெண் தொழிலாளிகளுக்குப் பாலியல் சீண்டல்கள், சவுக்கடி.. 

இவற்றையெல்லாம் தட்டிக்கேட்டு  எதிர்த்து,  சங்கம் கட்டி, துப்பாக்கிகளுக்கு அஞ்சிடாமல் பல்வேறு போராட்டங்களை நெஞ்சுரத்தோடு நடத்தினார்கள் தொழிலாளிகள்.

ராஜி,இதில் மிகமுக்கியமான பெண் போராளி..

பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக,  தனிப்பட்ட முறையில்  பெண்களைத் திரட்டி துணிச்சலோடு அவ்வப்போது மேஸ்த்திரிகளைப் பொடையெடுத்துக் கொண்டிருந்தவர்.

1940களின்  பிற்பகுதியில் ஒரு நாள்.

கும்மிருட்டு தொடங்கும் நேரம் ...

ரங்கவிலாஸ் மில்லிலிருந்து வேலை முடிந்து  ராஜி திருப்பிக்கொண்டிருக்கிறாள். 
கூட வந்த பெண்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் பாதையில் திரும்பியாயிற்று.   சாலை வெரிச்சோடிவிட்டது..  குதிரைவண்டி ஒன்று அவளுக்குக் குறுக்கே வந்து நிற்கிறது. நான்கைந்து உருவங்கள் அதிலிருந்து சடாரெனக் குதிக்கிறது. சுதாரித்து நிற்பதற்குள் கைகளும்   வாயும் கட்டப்பட்டுகிறது. போராடிச்சோர்ந்துவிட்ட ராஜியை அரசூருக்கு அருகில் ஒரு சோளக்காட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே ராஜி   கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் குற்றுயிராக்கப்படுகிறாள்.

 சின்னியம்பாளையத்துக்கு எப்படியோ    இந்தத் தகவல் போய் சேர்ந்து விடுகிறது.  ஆவேசமுற்ற அந்த நான்கு இளம் தொழிலாளிகளும் பொன்னானை தேடிப்பிடித்து   அடித்துத்துவைத்து நொங்கெடுக்கிறார்கள்.
சோர்ந்து  சாய்ந்த பொன்னானை  பாதிக்கப்பட்ட பெண்கள் விடவில்லை.   சூழ்ந்துகொண்டு ஆத்திரம் தீரும்மட்டும் புரட்டியெடுக்கிறார்கள்.
இறுதியில் பொன்னான் இறந்துபோகிறான்

தங்கள் மில்லில் உரிமைகேட்டு போராடிக்கொண்டிருந்த, மற்ற மில் தொழிலாளிகளுக்கு ஆதர்ச சக்தியாக இருந்த இந்த துடிப்புமிக்கதொழிலாளிகளை எப்படியாவது பழிவாங்கவேண்டுமென்று காத்திருந்த   மில் நிர்வாகம், இந்த   வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது.    சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சாந்தபிள்ளையை
உரிய மரியாதையோடு அழைத்துப் பேசுகிறது.    நால்வரின் மீது வழக்கு பாய, கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

வழக்கு விசாரணைக்கு வருகிறது .  ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்து  நீதிமன்றத்தை ஸ்தம்பிக்கவைக்கிறார்கள் . கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கமும் புகழ்பெற்ற  பல வழக்கறிஞர்களை வைத்து நால்வரையும்  விடுவிக்கக் கடுமையாகப் போராடுகிறது

வழக்கு, கோவையைத்தாண்டி , சென்னையைதாண்டி , டில்லியைத்தாண்டி    லண்டன் கவுன்சில் முடிவுக்கு போகிறது .
அங்கேயும் கம்யூனிஸ்ட் கட்சி
இங்கிலாந்தைச் சார்ந்த உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் பிரிட்டை வைத்து வாதாடிப்பார்க்கிறது.

ஆனால்,

உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய, பெண் தொழிலாளிகள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிராக போராடிய, சின்னியம்பாளையம் தொழிலாளிகளுக்கு தூக்குதண்டனையைத் தீர்ப்பாக அறிவிக்கிறது லண்டன் கவுன்சில்.

மில்தொழிலாளிகளின் கதறலும் கண்ணீரும் கோவையை மூழ்கடிக்கிறது.

 கொந்தளிப்பான சூழ்நிலையில் நான்கு தோழர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியின்   பொதுச்செயலாளர் பி சி ஜோஸி மற்றும் பி ராமமூர்த்தி, கே ரமணி ஆகிய தலைவர்கள் சிறைக்குள்  சென்று சந்திக்கிறார்கள். 

உணர்வை க்கட்டுப்படுத்தமுடியாமல்  தலைவர்கள் கலங்குகிறார்கள்    ,''வழிகாட்டும் நீங்கள் கண்ணீர் சிந்தக்கூடாது  'இன்குலாப் ஜிந்தாபாத்! லால் சலாம்! என்று சிறையதிர முழங்கி அவர்களை தேற்றி அனுப்புகிறார்கள்.

1946-ம்ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு  ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும்தூக்கிலிடப்பட்டனர்.

 பெண்களின்ஓலமும் கூக்குரலும் கண்ணீரும் வீதிகள்தோறும் கேட்டது.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் கொந்தளித்து எழுந்தார்கள்.

அணி அணியாய் ஊர் ஊராய்  போர்க்கோலம்பூண்டு நின்றார்கள். கண்ணில்கண்ட அதிகாரமட்டங்களை அடித்து நொறுக்கினார்கள்.

தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அமைதிவழியில் ஒரு  பிரம்மாண்டமானஅணிவகுப்பால் நகரத்தை அதிரச்செய்தார்கள்.

அதே அணிவகுப்பில் நால்வரையும் சுமந்துகொண்டு சின்னியம்பாளையம் வரை நடந்தே சென்றார்கள்.

அவர்களின்கடைசி ஆசைக்கு மரியாதை அளித்து சின்னியம்பாளையத்தில் ஒரே இடத்தில் நால்வரையும் அடக்கம்செய்துவிட்டு ஆறாகப்பெருகிநின்றார்கள்

இன்னும் அந்த சமாதி அங்கேதான் இருக்கிறது. நகரத்திலிருந்து எட்டிவிடும்தூரம்தான்.

தொழிற்சங்கப் போராளிகளுக்கு வீரவணக்கம்.




ஞாயிறு, 31 டிசம்பர், 2017

இலக்கியத்தில் யானையின் பெயர்கள்

தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று என்பேன். யானை என்ற ஒரு விலங்குக்கு எண்ணற்ற பெயர்கள் தமிழில் உள்ளது. அவற்றில் சில பெர்கள் மட்டுமே நம் வழக்கில் உள்ளது என்பது வேதனை தரக்கூடிய செய்தியாகும். பெற்றோர்களும், எழுத்தாளர்களும், தமிழாசிரியர்களும் நம் பிள்ளைகளுக்கு இப் பெயர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். சங்க இலக்கியங்கள் , காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலியவற்றில் யானையின் பல்வேறு பெயர்கள் காணப்படுகின்றன.










யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்












தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)









பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி








யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி