தாய்த்தொய்வ வழிபாடு
இனக்குழு சமுதாயத்தில் அவர்களின் உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகளின் அடிப்படையில் தெய்வ நம்பிக்கைகள் உருவானது. தொல்பழங்காலத்தில் இயற்கையின் சீற்றத்தினைக் கண்டு அஞ்சி வழிபட்டனர். இனக்குழு அமைப்பாக மாறிய போது வளமை, இனவிருத்தி போன்றன பெருகியதால் சடங்குகள் உருவாக்கப்பட்டன. சமுதாயத்தின் அமைப்புமுறை, கால்நடை வளர்ப்பு போன்றன வளர்ந்ததால் தெய்வ வழிபாட்டில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய மாற்றங்களால் பெருங்கற்காலத்தில் (இரும்புக் காலம்) ஆவி வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, குலக்குறிவழிபாடு போன்றனவும் இவற்றிற்கான சடங்குகளும் உருவாக்கப்பட்டன. இவற்றில் தாய்த்தெயவ வழிபாடு குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியத்தில் தாய்த்தெயவ வழிபாடு பரவலாகப் பேசப்படுகின்றது. ஆண் தெய்வங்களைக் காட்டிலும் பெண் தெய்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பெண்தெய்வங்கள் அரமகளீர், தேவப் பெண்கள், பாவை, கொல்லிப் பாவை, அணங்கு, கொற்றவை, பழையோள் போன்று பல பெயர்களில் பேசப்படுகின்றன. ஆற்றல் வாய்ந்த செயல்கள் அனைத்தும் பெண் தெய்வமான அணங்குடன் இணைத்தனர். முருகனை 'அணங்குடை முருகன் கோட்டம்', என்றும் மழையை 'மழை யணங்கு' என்றும் இலக்கைத் தாக்கும் அம்பை 'அணங்குடை பகழி' என்றும் அரச கட்டிலை 'அணங்குடை கட்டில்’ என்றும் போர்முரசை ‘அணங்குடை முரசு ' என்றும் போர்க்களத்தை 'அணங்கரும் பறந்தலை' என்றும் வீட்டு நிலையை 'அணங்குடை நெடுநிலை' என்றும் எல்லாவற்றையும் பெண் தெய்வத்தின் வடிவத்தில் பார்த்தனர்.
மனத இனவிருத்தியின் இரகசியம் தெரியாத காலத்தில் பெண் இனவிருத்தியின் தெய்வம் என்று முதன்மைபடுத்தப்பட்டாள். பூமியில் உயிருள்ளவை, உயிர் அற்றவை ஆகிய இரண்டிற்கும் தாய் "ஜகன்மாதா" அல்லது ஒரே தாய் என்ற நம்பிக்கை இதை இடிப்படையாக்க் கொண்டு உருவானது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகிலுள்ள பல நாடுகளிலும் இத்தகைய நிலையே இருந்தது. பயிர்த் தொழில் வளர்ச்சியடைந்த காலத்தில் சமுதாயத்தின் வளமைக்கு பூமியே கருபொருளாகக் கருதப்பட்டது. இதனால் பெண்ணையும் மண்ணையும் ஒன்றாகக் கருதினர்.
பிறப்பு, இறப்பு ஆகிய இரண்டிலும் பெண் முக்கியமான பங்கு வகிக்கின்றாள். அதனால் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் முதன்முதலில் பெண் தெயவச் சிற்பங்கள் நடப்பட்டன. வடஆர்க்காடு மாவட்டத்தில் மோட்டூர் மற்றும் உடையா நத்தம் ஆகிய இடங்களில் மனித சாயல் கொண்ட கற்சிற்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை ஸ்ரீவத்சத்தைப் போன்ற அமைப்புடையனவாக உள்ளன. இதை ஆதித் தாய்த் தெய்வம் என்று கருதுகின்றனர்.
தாழி வகையைச் சார்ந்த ஈமச்சின்னங்கள் பெண் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை, கோவை, கரூர், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டெக்கப்பட்ட தாழிகளில் பெண்ணின் உருவம் உருவகப் படுத்தப்பட்டுள்ளன. பெண்ணை தாழியாகப் பாவித்து இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு தாழிகள் ஒன்றில் தாழியின் மேல்பகுதியில் பெண்ணின் மார்பகங்கள் இரண்டு காட்டப்பட்டுள்ளன. இதன் கீழ்ப்பகுதியில் மூன்று கோடுகள் தாழியின் கீழ்ப் பகுதி வரை செல்கின்றன. இது தாழியை பெண்ணின் உருவமாகக் காட்ட முற்பட்டச் செயலின் வெளிபாடாகும்.
மற்றொரு தாழியின் மேல் பகுதியில் நின்ற நிலையில் ஒரு தாய்த் தெய்வமும் அதன் அருகில் கம்பு அல்லது கரும்பு போன்ற செடி ஒன்றும், அதன் மேல் கொக்கு ஒன்று அமர்ந்த நிலையிலும், இவற்றின் இடது பக்கத்தில் மான் ஒன்றும், அதன் கீழ்ப் பகுதயில் உடும்பு ஒன்றும் புடைப்பு உருவங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இவை இனவிருத்தியின் எச்சம் என்பது தெளிவு.
தற்போது ஆந்திர மாநிலத்தில் கோதாவரிக்கு அருகிலும், கம்மம் மாவட்டத்திற்கு அருகிலும் மூன்று தாய்த்தெய்வ உருவங்கள் பெருங்கற்காலச் சின்னங்களில் கண்டெக்கப்பட்டுள்ளன. குத்துக்கல் வடிவத்திலுள்ள அக் கல்லில் பெண்ணின் மார்பகங்கள் இரண்டு புடைப்புச் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. மற்ற இரண்டு குத்துக்கற்களின் மேல் பகுதியில் இரண்டு பள்ளங்களும், கீழ்ப்பகுதியில் ஒரு பள்ளமும் காணப்படுகின்றன. இவை பெண்ணின் உருவங்கள் என்று தொல்லியல் ஆய்வாளர் கே.பி. ராவ் அவர்கள் கூறுகிறார்.
மேற்கோள் நூல் கள்
தமிழர் பெருங்கற்கால பண்பாடு
தினமணி தொல்லியல் மனி செல்வராஜ் தாய் தெய்வம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக