கொங்கு நாட்டு பகுதியில் நாங்கள் சிறுவர்களாய் இருந்தநாட்டுபபோது தை 3 ஆம் நாள் அன்று பூப்பறிக்க செல்லுதல் என்ற ஒரு நிகழ்வு இருந்தது. அந்நிகழ்வில் ஊரின் அனைத்து குடும்பங்களும் தின்பண்டங்களை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு , ஊரில் உள்ள ஆற்றங்கரை , அல்லது, பசுமையான இடங்களுக்கு சென்று பங்கி உண்பர். அப்படி செல்லும் வழிநெடுக பெண்கள் கும்மி அடித்து பாடிக்கொண்டே செல்வர்..
அதை அனுபவித்த கடைசி தலைமுறையும் நாம் தான்..
அப்பாடல்...
*********
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு...
ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை
ஓலே.. ஓலே...
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா..
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்...
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா..
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு..
ஓலே..ஓலே ....
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை...
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா...
கையிருப்போ காப்பணந்தேன்..
கடைச்செலவோ வெகுகனந்தேன்...
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா...
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு...
ஓலே... ஓலே..
ஓலே...ஓலே....
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை
அனைவருக்கும் பூப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...
அதை அனுபவித்த கடைசி தலைமுறையும் நாம் தான்..
அப்பாடல்...
*********
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு...
ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை
ஓலே.. ஓலே...
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா..
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்...
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா..
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு..
ஓலே..ஓலே ....
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை...
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா...
கையிருப்போ காப்பணந்தேன்..
கடைச்செலவோ வெகுகனந்தேன்...
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா...
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு...
ஓலே... ஓலே..
ஓலே...ஓலே....
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை
அனைவருக்கும் பூப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...
